யாழ். பல்கலைக்கழக சேர். பொன். இராமநாதன் காண்பிய ஆற்றுகை கலைகள் பீட பன்னாட்டு ஆய்வு மாநாடு
யாழ். பல்கலைக்கழகத்தின் சேர்.பொன். இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இரண்டாவது பன்னாட்டு ஆய்வு மாநாடு இந்த மாதம் 14, 15ஆம் திகதிகளில் யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது என்று பீடாதிபதி த.றொபேட் அருட்சேகரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்தியத் தூணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி கலந்துகொள்வார்.
ஒருங்கிணைப்புக் குழு
இந்த மாநாடு பொதுத் தலைவர் துணைவேந்தர் பேராசிரியர் சிறி.சற்குணராஜா, தலைவர் பீடாதிபதி த.றொபேட் அருட்சேகரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீதாலட்சுமி பிரபாகரன், செயலாளர் முனைவர் கிருபாசக்தி கருணா, பதிப்பாசிரியர் முனைவர் அருட்செல்வி கிருபைராஜா ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவால் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழர் கலைகள் - மரபும் மாற்றமும் எனும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள் உரையை தமிழ்நாட்டில் இருந்து வருகை தரவிருக்கும் பேராசிரியர் செ.இரகுராமன் வழங்கவுள்ளார்.
ஆற்றுகை நிகழ்வு
விரலிசை அமுதம், தமிழிசை அரங்கு, கொஞ்சும் சதங்கை, மணிமேகலை எனும் தலைப்புக்களில் அமைந்த ஆற்றுகை நிகழ்வுகள் இந்தப் பீடத்தின் இசை, வாத்திய இசை, நடன, நாடகத் துறையினரால் அளிக்கை செய்யப்படவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |