கைதான அதிபர்.. அயலில் தங்கியிருந்த மனைவி - புதிய திருப்பம்!
அனுராதபுரம் பகுதியில் ஹெரொயினுடன் பாடசாலை அதிபர் ஒருவர் தங்கியிருந்த போது, அவரது மனைவியும் தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகரசபை உறுப்பினருமான டிஸ்னா நிரஞ்சலா அருகிலிருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது குழந்தைகளின் நலன் தொடர்பில் விசாரிப்பதற்காகவே அவர் அங்கு வந்ததாக பொலிஸ் விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
அவரிடம் மேலதிக வாக்குமூலங்களை பெற அனுராதபுரம் தலைமையக பொலிஸில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
போதைப்பொருள் குற்றச்சாட்டு
எனினும், அவர் இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நெரஞ்சலவின் கணவர் கடந்த 5ஆம் திகதி (05.11.2025) போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், அவர்களது மகன், கடந்த மாதம் 29ஆம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |