மலையகத்தில் பல்கலைக்கழகம்.. அநுர அரசாங்கத்திடம் கோரிக்கை
இந்த அரசாங்கமாவுது மலையக மக்களின் மீது அக்கறை கொண்டு பல்கலைகழகம் அமைக்க முன்வருமானால் அதற்கு நிதியும் காணியும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்தார்.
மலையக பல்கலைக்கழகம் தொடர்பாக நேற்று கொட்டகலை கொமர்சல் பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர், "மலையக பல்கலைகழகம் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக மாத்திரமே இருந்து வருகிறது.
காணி, நிதி தருகின்றோம்..
கடந்த ஆட்சியின் போது மலையக தலைவர்கள் பலர் மலையக பல்கலைகழகம் கொட்டகலையில் அமையப்போவதாக தெரிவித்து வந்தனர். அதற்கான சகல ஏற்பாடுகளும் நடந்து முடிந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலைகத்திலிருந்து குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து சுமார் 1500 மேற்பட்ட மாணவர்கள் வருடம் ஒன்றுக்கு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்றனர்.
ஆனால் இவர்கள் உயர்கல்வியினை தொடர தூர இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதனால் பெரும் தொகையான பணம் செலவாகின்றது குறைந்தது ஒரு மாணவனுக்கு 25000 தொடக்கம் 30,000; ரூபா மாதம் ஒன்றுக்கு செலவாகின்றது” என கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri
