யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஆறு அமர்வுகளில் 2608 பேருக்கு பட்டங்கள்

Jaffna.
By Independent Writer Feb 26, 2021 05:07 PM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பமாகி நாளைய தினமும் இடம்பெறவுள்ளது.

இரண்டு நாட்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் முன்னிலையில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கவுள்ளார்.

இரண்டு நாள்கள் - ஆறு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

முதலாம் நாளான இன்று 1388 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.

காலை 8.30 மணி முதல் 11 மணி வரை முதலாவது அமர்வும், நிதி முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம், விவசாய உயிரியலில் முது தத்துவமாணி, விவசாய இரசாயனத்தில் முதுதத்துவமாணி, சைவ சித்தாந்தத்தில் முது கலைமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளை தலா ஒவ்வொருவரும், வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினை 55 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், பொறியியல் விஞ்ஞான மாணிப் பட்டத்தை 52 பேரும், கலைமாணி (விசேடபகுதி) பட்டத்தை 160 பேரும், வணிகமாணி பட்டத்தை 88 பேரும், தாதியியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 09 பேரும், மருந்தகவியல் விஞ்ஞான மாணி சிறப்புப்பட்டத்தை 14 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 21பேரும் பெறவிருக்கின்றனர்.

இவற்றுடன், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டங்களைப் பெறுபவர்களில் 114 கலைமாணி பட்டதாரிகளதும் 2 நடனமாணி பட்டதாரிகளதும்; பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில், இந்து நாகரிகத்தில் கலாநிதி பட்டம், கல்வியியலில் முது தத்துவமாணி, வரலாற்றில் முது தத்துவமாணி, கிறிஸ்தவ நாகரிகத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர்பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்புடிப்ளோமா தகைமையினை 66 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், கலைமாணி (விசேட பகுதி) பட்டத்தை 168 பேரும், வியாபார நிருவாக மாணி(சிறப்பு) பட்டத்தை 22 பேரும், கலைமாணி (நடனம்) பட்டத்தை 50 பேரும், கலைமாணி(வாய்ப்பாட்டு) பட்டத்தை 77 பேரும், கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்)பட்டத்தை 22 பேரும் பெறவிருக்கின்றனர்.

இவற்றுடன், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டங்களைப் பெறுபவர்களில் 7 வணிகமாணி (பழைய பாடத்திட்டம்) பட்டதாரிகளதும், 16 வணிகமாணி (புதிய பாடத்திட்டம்)பட்டதாரிகளதும், 36 வியாபார முகாமைத்துவ மாணி பட்டதாரிகளதும் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நடைபெறவுள்ள மூன்றாவது அமர்வில், மனித வள முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம், புவியியலில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்ட தகைமைகளைத் தலா இருவரும், பௌதிகவியலில் முது தத்துவமாணி, மண் விஞ்ஞானத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்ட தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், ஆங்கிலம் - இரண்டாம் மொழியாகக் கற்பித்தலில் பட்ட பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 18 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், வியாபார நிர்வாக மாணி பட்டத்தை 259 பேரும், சட்டமாணி பட்டத்தை 49 பேரும், தாதியியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 22 பேரும், மருந்தகவியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 21 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 26 பேரும் பெறவிருக்கின்றனர்.

இரண்டாம் நாளான 25 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆயிரத்து 220 பேருக்குப்பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.

காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் நான்காவது அமர்வில் தமிழில் கலாநிதி பட்டம், மெய்யியலில் முதுதத்துவமாணி, அரசியல் விஞ்ஞானத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத்தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமாதகைமையினை 77 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், வைத்தியமாணி, சத்திர சிகிச்சைமாணி பட்டத்தை 118 பேரும், மருத்துவ விஞ்ஞானமானி பட்டத்தை ஒருவரும், சித்த வைத்தியமாணி, சத்திர சிகிச்சைமாணிபட்டத்தை 70 பேரும், பொதுக் கலைமாணி பட்டத்தை 127 பேரும், பொதுக் கலைமாணி(ஆளில்லா நிலையில்) பட்டத்தை ஒருவரும் பெறவுள்ளனர்.

இவற்றுடன், வியாபார நிருவாக டிப்ளோமா தகைமை பெறும் ஒருவரதும், நுண் நிதியியலில் டிப்ளோமா தகைமை பெறும் 25 பேரதும் உடற்கல்வி டிப்ளோமா தகைமை பெறும் ஒருவரதும், பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் தகைமைகள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ள ஐந்தாவது அமர்வில், சந்தைப்படுத்தலில் கலாநிதி பட்டம் ஒருவரும், சித்த வைத்தியத்தில் முதுதத்துவமாணி பட்டம், தமிழில் முது தத்துவமாணி பட்டம் ஆகிய உயர் பட்டத்தகைமைகளைத் தலா இருவரும், கல்வியியலில் முதுமாணி பட்டத்தை 98 பேறும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், விவசாய விஞ்ஞான மாணிப் பட்டத்தை 62 பேரும், கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (4 ஆண்டுகள்) பட்டத்தை 03 பேரும், கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (3 ஆண்டுகள்) பட்டத்தை ஒருவரும், கணினி விஞ்ஞான மாணிப் பட்டத்தை 02பேரும், பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞான மாணி (சிறப்பு) பட்டத்தை 10 பேரும்,விஞ்ஞான மாணி (சிறப்பு) பட்டத்தை 106 பேரும், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞான மாணி பட்டத்தை 18 பேரும், விஞ்ஞான மாணி (பொது) பட்டத்தை 98 பேரும் பெறவுள்ளனர்.

பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நடைபெறவுள்ள ஆறாவது அமர்வில்,புவியியலில் கலாநிதி, பொருளியலில் முது தத்துவமாணி பட்டம் ஆகிய உயர் பட்டத்தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமாதகைமையினை 25 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞான மாணிப் பட்டத்தை 26 பேரும், பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞான மாணி (சிறப்பு) பட்டத்தை 33 பேரும், விஞ்ஞான மாணி(சிறப்பு) பட்டத்தை 91 பேரும் பெறவுள்ளனர்.

இவற்றுடன், வவுனியா வளாகத்தின் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமாணி (பொது)பட்டத்தை 25 பேரும், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலில் விஞ்ஞான மாணி(சிறப்பு) பட்டத்தை 14 பேரும், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தை 15 பேரும், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 09 பேரும், விஞ்ஞானமாணி ( பிரயோக கணிதம், கணினி) பொதுப் பட்டத்தை 22 பேரும், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 04 பேரும், வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தை 52 பேரும், திட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தை 35 பேரும், வியாபார முகாமைத்துவமாணி(பொது) பட்டத்தை 26 பேரும் பெறவிருக்கின்றனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US