மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு (Video)
மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (10.04.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பல்கலைக்கழக பணிகள் விரைவில் ஆரம்பம்
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதியின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டுவந்துள்ளார். எனவே விரைவில் இந்த பணி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், வீ.இராதாகிருஷ்ணன், எஸ்.பி. திஸாநாயக்க, சீ.பீ ரத்னாயக்க ஆகியோரும், ஜனாதிபதி செயலாளர், மாகாண ஆளுநர், அரச அதிபர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி முன்னெடுக்கப்படும்
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன். தற்போது ஸ்தம்பித்த நிலையில் உள்ள அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி, வசந்தகால பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
