அமரிக்க பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 14வயது சிறுமி பலி
அமாிக்க லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 14 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார்
ஆடையகம் ஒன்றில் பெண் ஒருவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படும் ஆண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும்போது பொலிஸாரின் துப்பாக்கி சன்னம் ஒன்று துணியகத்தின் ஆடை மாற்றுமிடத்தில் இருந்த சிறுமி மீது பாய்ந்துள்ளது.
இதன்போதே சிறுமி கொல்லப்பட்டார். அத்துடன் பொலிஸாரின் குறியாக இருந்த ஆணும் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக அமாிக்க தகவல்கள் தொிவிக்கின்றன.
இதேவேளை சம்பவத்தில் தொடர்புடைய ஆணினால் . தாக்கப்பட்ட பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் சென் பெர்னாண்டோ பள்ளத்தாக்கின் வடக்கு ஹொலிவுட் பகுதியில் நேற்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


