இலங்கையில் “றோ”வுக்கு தெரியாமல் “சி.ஐ.எ” தலைமை அதிகாரியின் முக்கிய நகர்வு (Video)
இலங்கையில் CIAயின் திட்டம் மிகப்பெரியது. ACSA என்ற உடன்படிக்கை தான் அவர்கள் முதலில் கொண்டு வந்தனர். அதன்படி அமெரிக்காவின் படை கப்பல்கள் இலங்கையில் எந்த துறைமுகத்திலும் சென்று நிற்கலாம், அத்துடன் இலங்கையின் எந்த விமான நிலையத்தையும் அமெரிக்கா பயன்படுத்தலாம் என இராணுவ ஆய்வாளர் கலாநிதி.அரூஸ் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ACSA உடன்பாட்டினை 2002ஆம் ஆண்டு கொண்டுவரும் போது அது வெற்றியளிக்கவில்லை. மீண்டும் தமிழ் மக்களின் போரை காரணம் காட்டி 2007ஆம்ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்கின்றோம் என்று கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து 8 பக்கம் கொண்ட ACSA உடன்பாட்டில் கையெழுத்திட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்,
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan