பேரிடரில் பயன்படுத்த அமெரிக்கா வழங்கும் 10 ஹெலிகொப்டர்கள்
பேரிடர் சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்காக இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்களை நன்கொடையாக வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங், தனது 'X' தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, TH-57 (பெல் 206 சீ ரேஞ்சர்) வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகொப்டர்கள் டெக்சாஸில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ஹெலிகொப்டர்கள் Excess Defense Articles (EDA) திட்டத்தின் கீழ் எந்த செலவும் இல்லாமல் இலங்கைக்கு அனுப்பப்படும்.இவை 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு கிடைக்கும் பலன்கள்
'டித்வா' சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளின் போது கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இவை முக்கிய பங்கை வகிக்கும் என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விமானப்படைக்கு இந்த 10 ஹெலிகொப்டர்களை வழங்குவது அதன் ஹெலிகொப்டர் படையணியை வலுப்படுத்தும்.
So pleased that the United States is able to offer 10 @USNavy TH-57 (Bell 206 SEA RANGER) helicopters to @AirForceLK at no cost for the equipment itself. Manufactured in Texas & built for reliability, these helicopters are being transferred under the Excess Defense Articles… pic.twitter.com/sNzhemCDUW
— Ambassador Julie Chung (@USAmbSL) January 8, 2026
மேலும் விமான ஓட்டும் பயிற்சியை மேம்படுத்தல் மற்றும் மிகவும் திறமையான பேரிடர் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.