இலங்கையின் வர்த்தகர் ஒருவருக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!
இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் மற்றும் வெளி நடவடிக்கை சதிகாரரின் வர்த்தக பங்குதாரராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவர் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
முகமட் நிசார், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத் லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன்; இணைந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் அல்லது நிசார் இலங்கையை தளமாகக் கொண்ட தலிபின் வர்த்தக பங்காளி என அமெரிக்க திறைசேரி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தாலிப் மற்றும் நிசார் இருவரும் ஒரே வணிகத்தின் கூட்டு பங்காளிகளாக இருந்தனர். அத்துடன் நிசார் 2018 இன் பிற்பகுதியிலிருந்து இலங்கையில் தாலிபின் வணிகப் பங்காளியாக இருந்து செயற்பட்டு வந்துள்ளார்.
இலங்கையில் அவர்களின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் வருடத்திற்கு கிட்டத்தட் 200,000 டொலர்கள் பெறுமதியில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி குறிப்பிட்டுள்ளது.
நிசார் தாலிபின் உறவினர் என்றும் திறைசேரி குறிப்பி;ட்டுள்ளது.
பிரேசில், கொலம்பியா, இலங்கை, தான்சானியா, துருக்கியே மற்றும் வளைகுடா உட்பட
உலகம் முழுவதும் தாலிப் வணிகத்தை நடத்தி வருவதாக அமெரிக்க திறைசேரி
தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan