கொரோனாவினால் மற்றும் ஒரு உயிரினம் பலி!
கொரோனாவினால் மற்றும் ஒரு விலங்கு மரணமான சம்பவம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க இல்லினாய்ஸ், ப்ளூமிங்டனில் உள்ள மில்லர் பூங்கா விலங்கினக் காட்சிசாலையில் வசித்த ஒரு பனிச்சிறுத்தையே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது.
ரிலு என்ற 11 வயதான இந்த பனிச்சிறுத்தை மரணத்திற்கு முன்னர், நியுமோனியாவினால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வனவிலங்கு நிதியத்தின்படி, பனிச்சிறுத்தைகள் அருகி வரும் இனமாகும்
தற்போது உலகில் 4,000 முதல் 6,500 வரையிலான பனிச்சிறுத்தைகள் வாழ்கின்றன.
எனினும் அவை வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும் காலநிலை நெருக்கடி என்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன.
ஏற்கனவே நெப்ராஸ்காவில் உள்ள லிங்கன் குழந்தைகள் உயிரியல் பூங்காவில் மூன்று பனிச்சிறுத்தைகள் உயிரிழந்தன.
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam