தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமையே தீர்வு..! யாழில் இன்று ஐக்கிய சோசலிசக் கட்சி விசேட கூட்டம்
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான விசேட கூட்டமொன்றை அக்கட்சி இன்று(13.02.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், நல்லூரில் நடத்துகின்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள்

மேற்படி கூட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
01. தமிழ் மக்களுக்கு கௌரவமான மற்றும் நீதியான அரசியல் தீர்வை வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
02. நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தி, மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
03. வடக்கு கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினை மற்றும் வடக்கு மக்களின் வாழ்வாதார உரிமைகள் குறித்து இந்தக் கூட்டத்தின் போது ஐக்கிய சோசலிசக் கட்சி தனது தெளிவான நிலைப்பாட்டை கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.