சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் 7ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
சஞ்சு சாம்சன் 7 பந்தில் 7 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் சிஎஸ்கே பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் குவித்தது.
ருதுராஜ் கெய்க்வாட் அவர் 22 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 43 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 73 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இவர் ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 12.3 ஓவரில் 123 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த கார்த்திக் சர்மா 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே உடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார்.
16 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் குவித்தது.
ஷிவம் துபே 27 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் கிங்ஸ்
210 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் முறையே 39 ஓட்டங்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) மற்றும் 43 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) குவித்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கூப்பர் கனொலி 22 பந்துகளில் 36 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள்) எடுத்தார்.
போட்டி முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
பஞ்சாப் சார்பில் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 50ஓட்டங்களும், பிரப்சிம்ரன் சிங் 43 ஓட்டங்களையும் குவித்து அந்த அணி வெற்றிக்கு வித்திட்டனர்.