வட மாகாணத்தில் பல நிகழ்வுகளில் கலந்துக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் (video)
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரம் கடந்த நாட்களில் வட மாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சி நகரில் இன்று(24.02.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த மக்கள் சந்திப்பு கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து
மக்கள் வருகை தந்திருந்தனர்.
குறித்த சந்திப்பானது ஐக்கிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் எம் மரியசீலன் தலைமையில் ஆரம்பமானதுடன் இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உமாசந்திரா பிரகாஸ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் எம்.மரியசீலன், பிரதேச அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (24.02.2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும் முள்ளியவளை மாஞ்சோலைப் பகுதியிலும் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரை கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் முத்துக்குமாரசாமி லக்ஷயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எதிர்கட்சி தலைவர்,முன்னால் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதின், ஜக்கிய மக்கள் சக்தியின் வடக்கு இணைப்பாளர் உமாச்சந்திரபிரகாஸ்,மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் கட்சியின் வேட்பாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் தொண்டர்கள் என பெருமளவானர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
மேலும் முல்லைத்தீவு முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திலும் இவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இதன்போது மக்கள் அமோக வரவேற்றினை கொடுத்துள்ளார்கள்.
செய்தி-கீதன்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசஸ இன்று யாழ்.பொம்மைவெளி பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டு அறிந்துகொண்டார்.
பின்னர் அபூபக்கர் ஜூம்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கும் கலந்துரையடலில் ஈடுப்பட்டதுடன் பள்ளிவசால் புனரமைப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தி-கஜிந்தன்

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
