கெரவலப்பிட்டிய மின்சார நிலைய ஒப்பந்தம் குறித்து தேரர்களிடம் முறையிடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி
கெரவலப்பிட்டிய மின்சார நிலையத்தை நடத்துவதற்கு அமெரிக்க நிறுவனத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்வரும் 27ஆம் திகதி அன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்களிடம் முறையிடவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா (Nalin Bandara) இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எரிசக்தித் துறையின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை கெரவலப்பிட்டிய ஒப்பந்தம் முக்கியமான ஒன்று என்பதால், தமது நாடாளுமன்றம் உறுப்பினர்கள் மகாநாயக்கர்களைச் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிப்பது, குறித்த ஒப்பந்தத்தைத் திருத்தியமைக்க உதவும் என்று நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri