இலங்கையின் பாதுகாப்புப் படையினர் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி - செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வின் போது இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை கடந்த காலத்திலிருந்து விலகி புதிய போக்கை வகுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையின் நிலைமைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனமும் ஆதரவும் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கைக்கான ஊடாடும் உரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |