ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: சமூக ஊடகங்களில் பகிரப்படும் பொய்யான விபரங்கள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியீட்டுவார்கள் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விபரங்கள் பொய்யானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இந்த விடயம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த சமூக ஊடகப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சஜித் தரப்பு முன்னிலை
இந்த தகவலின் பிரகாரம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி வகிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மொட்டு கட்சி அடுத்த இடத்தையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மூன்றாம் இடத்தையும், நான்காம் இடத்தை அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் 339 வீதத்தினால் வளர்ச்சியடையும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்து கணிப்பு
எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறான ஓர் கருத்துக் கணிப்பை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையினால் இவ்வாறான ஓர் அறிக்கை வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக் கிளையினால் கருத்து கணிப்பு நடத்தப்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |