மோடியின் இலங்கை பயணத்தை வரவேற்கும் ஐக்கிய தேசிய கட்சி
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது.
ஏப்ரல் 4 ஆம் திகதி மோடி இலங்கைக்கு இரண்டு நாள் பயணத்தை ஆரம்பிக்கிறார்.
இந்த நிலையில், மோடியின் பயணம், இரு நாடுகளுக்கிடையேயான காலத்தால் அழியாத உறவில் ஒரு நேசத்துக்குரிய மைல்கல்லைக் குறிக்கிறது" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை
ஜூலை 2023 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட "இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டாண்மை தொலைநோக்குப் பார்வையை" வலுப்படுத்த இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கியது நட்பின் ஆழத்திற்கு ஒரு சான்றாகும் என்றும் கட்சி நினைவு கூர்ந்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கிழக்கு துறைமுக மாவட்டமான திருகோணமலையின் வளர்ச்சி வர்த்தகம், எரிசக்தி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள, ஒரு பிராந்திய இணைப்பை ஏற்படுத்தும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை கூறுகிறது.
