ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட நாம் தயார் - ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசிய கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்ததே இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவர் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பித்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்ற பின் செய்தியாளார்கள் மத்தியில் பேசும் போதே ருவன் விஜேவர்த்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் பெரும்பாலனவர்கள் முன்னாள், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தவர்கள்.
எனவே அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சி தடைகளை விதிக்கவில்லை. அவர்களுக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri