பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு
பிரித்தானியாவில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியான போரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்செர்வேட்டிவ் கட்சி 400க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்காட்லாந்திலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள முடிவுகளின் படி, லிபெரல் டெமோக்ட்ரிக் கட்சி இதுவரை 170 உள்ளூராட்சி ஆசனங்களை இங்கிலாந்தில் வென்றுள்ளதாகவும், பசுமை கட்சியும் பெரும் வெற்றிகளை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் தொழிலார் கட்சி 35 விகித வாக்குகளையும், போரிஸ் ஜோன்ஸனின் கன்செர்வேட்டிவ் கட்சி 30 விகித வாக்குகளையும், லிபெரல் டெமோகிராடிக் 19 விகித வாக்குகளையும் ஏனைய காட்சிகள் 16 விகித வாக்குகளையும் பெற்றுள்ளன.
லண்டனில் முக்கிய இடங்களை கன்செர்வேட்டிவ் கட்சியிடம் இருந்து தொழிலார் கட்சி வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பகுதியிலும் பெரும் இழப்புகளை போரிஸ் ஜோன்ஸனின் கட்சி இழப்புகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அயர்லாந்திலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது அங்கு சின் பெயின் கட்சிக்கும் டெமோகிராடிக் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
ஸ்காட்லாந்தில் ஸ்கோட்டிஷ் நேஷனல் கட்சி பெரும் வெற்றிகளை பெற்றுள்ளது
அதற்கு அடுத்தபடியாக தொழிலார் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. போரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்செர்வேட்டிவ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.