இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்க முயற்சிக்கும் ஜிசிசி
இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமது சபையின் உறுப்பு நாடுகள் ஊக்குவிப்பதாக ஜிசிசி என்ற வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உறுப்பினரும் சவூதியின் ஜெனீவாவுக்கான நிரந்தர பிரதிநிதியுமான அப்துல் மொஹ்சென் பின் குதைலா தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில், உரையாற்றிய அவர், இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பேரவை உறுதிப்படுத்துகிறது.
ஆதரவு வழங்க தீர்மானம்
அத்துடன் அனைத்து திறந்த மற்றும் பயனுள்ள உரையாடல்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும், அதற்கு
தீவிரமான பணி, ஒருங்கிணைந்த உரையாடல் மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தேவை
என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.