பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனுமதி மறுத்த ஐக்கிய அரபு இராச்சியம்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தமது நாட்டில் நடத்துவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரின்போது, அண்மையில், இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே பலத்த சேதம் ஏற்பட்டது.
சூப்பர் லீக் போட்டிகள்
இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடிய வீரர்கள் அனைவரும் பயந்து தங்களது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நிறுத்தப்பட்டு, அவற்றை ஐக்கிய அரபு இராச்சியத்தில நடத்த பாகிஸ்தானிய கிரிக்கெட் சபை திட்டமிட்டது எனினும், இது தொடர்பான பாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய அரபு இராச்சியம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தியாவுடன் தற்போது மோதல் போக்கை பாகிஸ்தான் கடை பிடித்து வருவது ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலோசனை
எனவே இந்தியாவை எதிர்த்துக்கொண்டு போட்டிகளை நடத்த முடியாது என்று ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனால் பிஎஸ்எல் தொடரை எங்கு நடத்துவது என்ற முடிவை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை போர்க் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளின் தொடர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.