ஆலயத்தில் அலங்கார பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல்: நால்வர் படுகாயம்
கிளிநொச்சி - ஊற்றுப்புலம் ஆதி விநாயகர் ஆலயத்தில் அலங்கார பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
கிளிநொச்சி - ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு (13.09.2023) அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அலங்காரப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
தாக்குதலில் காயமடைந்த நான்கு இளைஞர்கள் உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மூவர் இன்றைய தினம் அவசரமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்ற குழு என கடந்த காலங்களில் பல தடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் என்றும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை இந்தக் குழுவினரால் கிராமத்தில் நிம்மதியற்ற நிலைமை உருவாகியுள்ளது எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கஞ்சா, கசிப்பு என சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இந்தக் குழுவினர் தங்களது செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அவர்களை அச்சுறுத்துவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இதுவரை பொலிஸாரால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர் .
இந்தக் குழுவினர் மீது பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam