கடற்படை வீரரை தாக்கி தங்கச்சங்கிலியை பறித்த அடையாளம் தெரியாத நபர்கள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொடகம நுழைவு பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், கடற்படை வீரரை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது தாக்குதல்
கடற்படை வீரர் மற்றுமொரு நபருடன் நேற்று முன்தினம் வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, பேருந்து நிறுத்தகத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், இரண்டு பேரையும் தாக்கி, தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் தற்போது தங்கச்சங்கிலி அறுப்பு சம்பவங்கள் பரவலாக நடந்து வருவது பொலிஸ் செய்திகள் மூலம் உறுதியாகியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வருமானம் இன்மை, போதைப் பொருள் பாவனை என்பன காரணமாக நாட்டில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.