உக்ரைன் நகரொன்றில் திடீர் தாக்குதல்! பின்னணி குறித்து அறியாமல் திணறும் அதிகாரிகள்
உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் திடீரென இடம்பெற்ற வான்வழி தாக்குதலால் 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நகரின் பிராந்திய இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி "அடையாளம் தெரியாத வான்வழி பொருள்" ஜாபோரிஜியா நகரில் திடீரென விழுந்ததன் காரணமாக குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் உள்ளடங்குவதாக ஜபோரிஜியாவின் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் யூரி மலாஷ்கோ தெரிவித்தார்.
சேதங்கள் தொடர்பான தகவல்
இந்த சம்பவம் இன்று(12.07.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நகரின் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆறு அடுக்குமாடி கட்டடங்களில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஜபோரிஜியா நகர சபையின் செயலாளர் தெரிவித்தார்.
ஜபோரிஜியா, தெற்கு உக்ரைனுக்கு அருகில் காணப்படும் முக்கிய நகரம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
