யாழில் கிணற்றுக்குள் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு- தீவிரப்படுத்தப்படும் விசாரணை
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(07.04.2026) இடம்பெற்றுள்ளது.
அடையாளம் காண பொலிஸார் கோரிக்கை
மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் காணப்படுகிறது.

அத்துடன், குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சடலம் கிணற்றின் அடியில் காணப்படுவதுடன் களத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
குறித்த நபரை அடித்து கொலை செய்த பின் கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தடவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலதிக தகவல் - தீபன்
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri