இலங்கையில் மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை 70 இலட்சம் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் இதனை அறிவித்துள்ளது.
சிறுவர்களுக்கான சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்றவை அத்தியாவசிய சேவைகள் மருந்து பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட மின்வெட்டு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கான மனிதாபிமான உதவி
இந்தநிலையில் 23 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.
5 வயதுக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 56,000 குழந்தைகளுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.
அத்துடன் 4.8 மில்லியன் சிறுவர்களுக்கு
தடையில்லா கல்வி கிடைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பான
யுனிசெப் தெரிவித்துள்ளது.