இலங்கையின் உண்மை நிலைமையை வெளியிட்டுள்ள யுனிசெஃப்
தொழில் வாய்ப்பின்மை காரணமாக குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், இலங்கையில் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
16 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என 3 ஆயிரம் பேரை அடிப்படையாக கொண்டு அந்த அமைப்பு கடந்த சில மாதங்களில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வாழ்வாதாரம் இழப்பின் பிரதிபலனாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி சீர்குலைந்துள்ளது. துஷ்பிரயோகங்கள், மன அழுத்தம், உணவு கிடைக்காமை உட்பட பல பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
கோவிட் தொற்று நோய் நிலைமையானது இந்த இளைஞர்களின் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
சாதிய பிரச்சினைகள், மனநல மருத்துவ வசதிகள் இல்லாமை, பாடசாலைகளில் ஆலோசனை சேவைகள் இல்லாதது, காலநிலை மாற்றங்களின் அழிவான பாதிப்புகள் உட்பட பிரச்சினைகள் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
யுனிசெஃப் அமைப்பின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.