மயிலத்தமடுவில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மயிலத்தமடு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 06 பேர் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களுக்கு எதிரான வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் நேற்றைய தினம் (24.01.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதி வருகையின் போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக ஏறாவூர் பொலிஸாரினால் ஊடகவியலளார்கள் இருவர் உட்பட 37 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மயிலத்தமடு பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |