ரோஹிங்கிய அகதிகளை காப்பற்ற உதவியவர்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா ஆணையம் வரவேற்பு
இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கிய அகதிகளை காப்பற்ற உதவிய உள்ளூர் கடற்தொழிலாளர்கள் மற்றும் இலங்கைக் கடற்படையை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் வரவேற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை கடற்படைக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி உடையவர்களாக உள்ளோம் என ஆசிய பசுபிக்கிற்கான யு.என்.எச்.சி.ஆரின் இயக்குநர் இந்திக ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது கடலில் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டிய மனிதாபிமானத்திற்கான உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் வேண்டுகோள்
தரைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடனடி தேவைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு யு.என்.எச்.சி.ஆர் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது.
படகுகளில் ஆபத்தில் சிக்குண்டுள்ளவர்கள் கடலில் மிதப்பவர்களை காப்பாற்றுவதற்கு அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளும் முன்வரவேண்டும் என அகதிகளிற்கான ஐ.நாவின் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச கடப்பாடுகள் மற்றும்
மனிதாபிமான பாரம்பரியங்களின் அடிப்படையில் அவர்கள் தரையிறங்குவதற்கும்
அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
