இஸ்ரேல் - காசா விவகாரம்: போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்
மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காசாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தீவிரவாத தாக்குதலுக்கு வெளிப்படையான கண்டனத்தை தெரிவித்திருந்த கனடா இதில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியா புறக்கணித்துள்ளது. எனினும் காசா பகுதியில் தடையின்றி மனிதாபிமான அணுகலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களில் 1,400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை அடுத்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பாரிய எதிர் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் 10வது அவசரகால சிறப்பு அமர்வில் கூடிய, பொதுச் சபையின் 193 உறுப்பினர்கள், ஜோர்தான் சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தின் மீது வாக்களித்தனர்.
எனினும் இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
ஜோர்தான் சமர்ப்பித்த யோசனையில் ஹமாஸ் பற்றிய எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியே இந்த நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.