கிண்ணியா மீன் சந்தையில் அழிக்கப்பட்ட ஒருதொகை மீன்கள்
திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகரசபை பகுதிக்கு உட்பட்ட கிண்ணியா ஏ 15 பிரதான வீதியிலுள்ள மீன் சந்தையில் சுகாதாரத்துக்கு கேடான ஒருதொகை மீன்கள் அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
முறைப்பாடு பதிவு
குறித்த சந்தையில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய மீன் சந்தையை கிண்ணியா நகரசபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகதார மருத்துவ அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதன்போது பாவனைக்கு உதவாத ஒரு தொகை மீன்கள் கைப்பற்றப்பட்டு தவிசாளர் முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் இவ்வாறான பாவனைக்கு உதவாத மீன்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வியாபாரிகளுக்கு இதன்போது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
