ஈரானில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு.. அமெரிக்கா - இஸ்ரேலிய படைகள் வீசிய பாரிய குண்டுளால் ஏற்பட்ட ஆபத்து!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் வீசிய, வெடிக்காத நிலையில் இருந்த குண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிப்பில் 14 ஈரானிய வீரர்கள் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் ஜான்ஜன் நகருக்கு அருகே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் காயமடைந்த மேலும் 2 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஜான்ஜன் நகருக்கு அருகே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாரிய குண்டுகள்..
இதில் காயமடைந்த மேலும் 2 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை சுமார் 15,000க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகளை ஈரான் ராணுவம் செயலிழக்கச் செய்திருந்தாலும், இன்னும் நிலத்தில் புதைந்துள்ள குண்டுகள் பெரும் அச்சுறுத்தலாகவே நீடிக்கின்றன.
சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் (Cluster Bombs) இந்த மீட்புப்பணியில் மிகப்பெரிய சவாலாகவும், உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 8 முதல் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், இத்தகைய உயிரிழப்புகள் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் மீண்டும் ஒரு கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.