இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிலை.. அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கும் சஜித் பிரேமதாச
நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் தடையாக இருப்பதாகவும், இதன் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற சந்திமா விஜய குணவர்தனவின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் வளங்கள்
கடந்த 7 ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் தற்போதுள்ள மத்திய கிழக்கு போர் வரை ஐந்து பெரும் துயர்நிறைந்த சம்பவங்களை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

இதனால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் கடலோரங்களில் எரிவாயு மற்றும் எரிபொருள் வளங்கள் காணப்படுவதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் மற்றும் சிலரின் சுயநலப் போக்குகள் காரணமாக இந்த வளங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.