வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
வடமாகாணத்தில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி தொழிலை வழங்கு என்னும் கருப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(16.07.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு
இதன்போது, அரச நியமனத்தில் உள்வாரி, வெளிவாரி, பாகுபடுவேண்டாம் எல்லோருக்கும் ஒரே பட்டம் தான், வயது ஏறுது வாழ்க்கை போகுது, வேலையை கொடு என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பு கவனயீர்ப்பினை முன்னெடுத்ததுடன் கோசங்களை ஏழுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, சிதறு தேங்காய் அடித்து தமது எதிர்ப்பினை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், இந்த போராட்டத்தில் 40 மேற்பட்ட வேலையில்லாத பட்டதாரிகள் உள்ளிட்ட மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan