அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் முன்னெடுப்பு
அம்பாறை (Ampara) மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (15) முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு அருகாமையில் ஆரம்பமானதுடன் பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர்.
ஆதரவாக ஏனைய வேலையற்ற பட்டதாரிகள்
இதன் போது இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டமானது அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உப தலைவர் தலைமையில் இடம்பெற்றதுடன் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏனைய வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பி உரிய தரப்பினர் தீர்வினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




