கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய சந்தேக நபர் கைது
தலவாக்கலை, அக்கரபத்தனையில் உள்ள ஹோல்புரூக் பகுதியில் பாதாள உலக கொலைகளில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அக்கரபத்தன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 32 வயதுடைய லஹிரு சம்பத் என தெரியவந்துள்ளது.
பாதாள உலகத் தலைவர்கள்
மீதியகொட பகுதியில் நடந்த பல கொலைகளுக்குத் தேடப்படும் சந்தேக நபர் இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகத் தலைவர்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த நாட்டில் சிலரைத் தொடர்பு கொள்ளத் தேவையான வட்ஸ்அப் தொழில்நுட்பத்தை வழங்கியதாக கைது செய்த பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர்களின் தொலைபேசிகளின் பகுப்பாய்வின்படி, சந்தேக நபர் அக்கரபத்தன பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு உத்தரவு
அக்கரபத்தன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று (03)பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நுவரெலியா நீதவான் லங்காகனி பிரபுத்திகா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மேலும் சந்தேக நபரை மீட்டியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் அக்ரபத்தன பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.



