பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு சேறு பூசும் முயற்சியில் பாதாள உலக குழுக்கள்!
பொலிஸ் உயர் அதிகாரிகளை இலக்கு வைத்து சேறு பூசும் முயற்சிகளில் பாதாள உலகக் குழு தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புலனாய்வு பிரிவு தகவல்களின் அடிப்படையில் இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துணை பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை இலக்கு வைத்து இந்த சேறு பூசல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அதிகாரிகளுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி சேறு பூசும் செய்திகள் மற்றும் இணையதள செவ்விகளை பகிர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலக குழு தலைவரான கஞ்சிபனி இம்ரான் உள்ளிட்ட பிரதான பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் இந்த வேறு பூசல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரோஹான் ஓலுகலவிற்கு ஏற்கனவே உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துணை பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் குரல் பதிவு ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த குரல் பதிவை பகிர்ந்த நபர் குறித்தும் பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கஞ்சிபானி இம்ரான் மற்றும் அருண் என்ற இரண்டு நபர்களுக்கு இடையில் நடைபெறும் தொலைபேசி தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குரல் பதிவில் ரொஹான் ஓலுகல தொடர்பில் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரல் பதிவு ரொஹான் ஓலுகல போன்ற அதிகாரிகளை இழிவுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 18 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam