அவிஸ்ஸாவளையில் பயங்கர ஆயுதங்களுடன் பாதாள உலகக்கும்பல் செயற்பாட்டாளர் கைது
அவிஸ்ஸாவளைப் பிரதேசத்தில் பிரபல பாதாள உலகக்கும்பல் செயற்பாட்டாளரான மஸ்வெத்தா என்பவர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ம் திகதி அவிசாவளைப் பிரதேசத்தில் வேவில கிராமத்தில் வசித்த பெண்ணொருவரிடம் மஸ்வெத்தா என்ற பெயரில் அறியப்படும் நபர் 50 ஆயிரம் ரூபா கப்பமாக பெற முயற்சித்துள்ளார்.
எனினும் குறித்த பெண் கப்பம் கொடுக்க மறுத்தபோது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது சம்பவத்தில் காயமடைந்த பெண், ஹொரணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார், துப்பாக்கிப் பிரயோகம் செய்த மஸ்வெத்தா மற்றும் அவரது உதவியாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் இருந்து சொட்கன் ரக துப்பாக்கிகள் இரண்டு, அதற்கான மேலதிக குழல் ஒன்று மற்றும் கைக்குண்டு, வெற்றுத் தோட்டா உறைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
