பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் கிம்புலாஎலே குணா சென்னையில் கைது
இலங்கையின் மிகவும் பிரபல்யமான பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான சின்னய்யா குணசேகரன் எனப்படும் கிம்புலாஎலே குணா சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த குணா மற்றும் அவரது மூன்று சகாக்களை சென்னை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து விமானம் மூலமாக டெல்லி பயணிக்க முயற்சித்த போது அதிகாரிகள் குணா உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர்.
பாரியளவில் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் குணாவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குணா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணியதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொலை சதி முயற்சியில் தொடர்புட்டிருந்தார் எனவும் இந்திய ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
