இலங்கையில் பௌத்தத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்! பின்னணியில் பாதாள உலக புள்ளிகள்..
நாட்டில் தற்போது பௌத்த மதத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலப்பனை ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
மகா சங்க மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது விகாரைகளில் இடம்பெறும் பெரஹராக்களை, பிக்குகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுக்கள் அல்லாது, பாதாள உலகக் குழுக்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.
அச்சுறுத்தல்..
பௌத்த மதத்தின் பாரம்பரிய விழுமியங்களும், மத நிகழ்வுகளின் புனிதத் தன்மையும் படிப்படியாக சீர்குலைந்து வருகின்றது.
பெரஹரா உள்ளிட்ட மத நிகழ்வுகள், பிக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புக்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற வேண்டிய நிலையில், தற்போது அவற்றில் சட்டவிரோத பாதாள உலகக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த நிலை நீடித்தால், பௌத்தத்தின் ஒழுக்கம், மரபு மற்றும் சமூக மரியாதைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.
பௌத்தத்தின் சுயாதீனத்தையும், புனிதத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.