பதாள உலக குழுக்களுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்கப்படும்:தேசபந்து தென்னக்கோன்
பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு புரியக்கூடிய மொழியில் பதிலளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் பாதாள உலகக் குழு தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் தென் மாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
விசேட ஏற்பாடுகள்
இதன்போது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொலிஸ் மா அதிபர் யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படாது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பாதாள உலகக்குழு செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் என்பனவற்றை இல்லாதொழிக்கும் வரையில் யுக்திய நடவடிக்கை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு இனி எவ்வித மன்னிப்பும் கிடையாது .
தென் மாகாணத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
