அரசாங்கம் மக்களின் புலம்பல்களை புரிந்துக்கொள்ள வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் புலம்பல்களுக்கு பதிலாக மக்களின் புலம்பல்களை புரிந்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ இல்லங்களின் மின் கட்டணம், குடிநீர் கட்டணம், வசதிகள் குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர் துன்ப புலம்பலகளை முனவைத்தாலும் மக்களின் துயரங்கள் தொடர்பில் எவருக்கும் எந்த பொறுப்புமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
புத்தளம் நாத்தாண்டிய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் பற்றி அறிய இன்று அங்கு விஜயம் செய்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலைகள் அதிகரித்து, பிள்ளைகளின் கல்வி சீர்குலைந்து, முழு நாடும் செயலிழந்த நிலைமைக்கு சென்றுள்ளது.
இவ்வாறான நிலைமையில், கன மழைக் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திலும் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இடர் முகாமைத்துவ கட்டமைப்பு செயற்படுகிறது என்பதை காண முடியவில்லை.
மந்த கதியில் தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக உடனடியான தீர்மானங்களை எடுத்து, தலையீடுகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri