கொலையில் முடிந்த காணி தகராறு! மாமனை கொன்ற மருமகன் (Photo)

Police Murder Arrest Oddamavadi Farmer
By Navoj Dec 21, 2021 11:53 AM GMT
Report

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு வயல் பிரதேசத்தில் தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில் தாய் மாமன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில் உள்ள வயல் காணி தொடர்பாக சகோதரர் ஒருவருக்கும் அவரது சகோதரிக்கும் இடையில் காணி தகராறு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இன்று(21) சகோதரியின் மகனுக்கும் தாய் மாமனுக்கும் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கான காரணம் என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் தாயாரான சேகு இஸ்மாயில் உம்மு சல்மா என்பவர் தெரிவிக்கையில்,

நானும் எனது கொலை செய்யப்பட்ட மகனும் வயலுக்கு உரம் எற்றிவதற்கு வந்த போது வயலுக்குள் எனது மகளின் மகன் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எனது மகன் ஏன் எனது காணிக்குள் வந்தாய் என்று எனது பேரனிடம் கேட்ட போது அவருக்கு அடித்து வெட்டிவிட்டு என்னிடம் உனது மகனை வெட்டியுள்ளேன் கொண்டு போ என்று சொல்லிவிட்டு எனது பேரன் போனார் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாகக் முள்ளிவட்டவான் விவசாய அமைப்பு தலைவர் ஐ.எல்.எம். முஸ்தபா கருத்து தெரிவிக்கையில்,

நானும் என்னுடன் மற்றுமொரு விவசாயியும் முச்சக்கரவண்டியில் வரும் போது உசனார் பௌசான் என்பவர் எனது மாமாவை வெட்டி விட்டேன், அவரை உங்கள் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார்.

அவருடன் நானும் என்னுடன் வந்தவர்களும் வந்து பார்த்த போது "அவர் மரணித்து விட்டார், நீங்கள் அம்புளன்ஸ்சுக்கு அறிவியுங்கள்" என்று பௌசான் சொல்லிவிட்டுச் சென்றார் என்று தெரிவித்தார்.

மீறாவோடை மாஜ்சோலை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அலியார் ஹமீட் (வயது – 38) என்பவர் மரணமடைந்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US