இதுவரை உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலத்தில்...
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டதும் இதுவரை உரிமை கோரப்படாதுமான. NP /HC /KN/195/2024 வழக்கு இலக்கமுடைய Bolero truck (makendra) WP PQ 9390 வாகனம் 28 -02 -2026 ஆம் திகதி காலை 9-30 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏல விற்பனைக்கு உட்படுத்தப்படும் பொருட்களை உரிமை கோருபவர்கள் யாராவது இருப்பின் ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் தமது கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்.
ஏல விற்பனையில் விற்கப்பட்ட பொருட்கள்
ஏல விற்பனைக்கு உட்படுத்தப்படும் பொருட்களுக்கு உரிய கேள்வி இல்லாவிடத்தில் அப்பொருட்களின் ஏல விற்பனையை மீளப் பெறும் உரிமையை மண்று தன்னகத்தை கொண்டுள்ளது.

ஏல விற்பனையில் விற்கப்பட்ட பொருட்களுக்குரிய பணத்தை உடன் செலுத்தி பொருட்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், கொடுப்பனவுகள் பணமாகவே செலுத்தப்பட வேண்டும். காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏல விற்பனையில் பங்கு பற்றுபவர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் செல்லுபடியான ஆவணங்களுடன் பிரசன்னமாக இருத்தல் வேண்டும் என மேல் நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.