ஆயுர்வேத வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிப்பு! ரிஷாட் பதியுதீன் முன்வைத்துள்ள கோரிக்கை

Ranil Wickremesinghe Risad Badhiutheen Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Ashik Jun 01, 2023 10:08 PM GMT
Report

ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை தொடர்புகொண்டு கவலை தெரிவித்ததையடுத்து, அவர் நேற்று(01.06.2023) ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை எழுதிய கடிதத்திலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி 

ஆயுர்வேத வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிப்பு! ரிஷாட் பதியுதீன் முன்வைத்துள்ள கோரிக்கை | Unani Physicians Prescribing Ayurvedic Medicine

மேற்படி நியமனங்கள் தொடர்பில், ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது. இம்முறை 100க்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மட்டும் நியமனம் வழங்குவது, யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனங்களின் போது, ஒரே முறையில் 7 ஆயுர்வேத வைத்தியர்களும் இரு யூனானி வைத்தியர்களும் ஒரு சித்த வைத்தியரும் உள்வாங்கப்பட்டு, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், இம்முறை வழங்கப்பட இருக்கின்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்களில், யுனானி வைத்தியர்கள் உள்ளீர்க்கப்படாமையானது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது டன், இது யுனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தான் கருதுவதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆயுர்வேத வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிப்பு! ரிஷாட் பதியுதீன் முன்வைத்துள்ள கோரிக்கை | Unani Physicians Prescribing Ayurvedic Medicine

மேற்படி ஆயுர்வேத வைத்தியர்களின் நியமனத்தில், யூனானி வைத்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாதிக்கப்பட்டுள்ள யூனானி வைத்தியர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்த நியமனத்தில் யூனானி வைத்தியர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தேவையான பணிப்புரையை உரிய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்,ஜனாதிபதியின் செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்பட்டு இருக்கின்ற அநீதி தொடர்பில் தெளிவுபடுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US