சர்ச்சைக்குரிய அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்கள்
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
“அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவதற்காக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் ஒரு சிங்கப்பூர் பிரைஜயாகும்.
பிணைமுறி மோசடி
அவர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றார். இதனால் அவரை அழைத்து வருவதில் சில சிக்கல்களை எதிர்கொண்டோம்.

ஏனென்றால் அந்த நாட்டு அரசாங்கமே அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசாங்கங்கள் எப்போதும் தங்கள் குடிமக்களின் பார்வையில் இருந்தே சிந்திக்கும். எனவே நாம் கூடுதல் ஆதாரங்களை சேகரித்து அரசாங்கத்திடம் உறுதிப்படுத்த வேண்டும் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri