ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வாக்களிப்பு! இந்தியாவின் நிலை என்ன?
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் குறித்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பு தொடர்பில் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து பலரும் தமது கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை தொடர்பாக கோர் குழுவால் நகர்த்தப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் இந்தியா வாக்களிக்கும் சாத்தியம் இல்லை என உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோளிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானத்தை தோற்கடிக்க 47 உறுப்பு நாடுகளில் 24 நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு தேவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
