இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை

Srilanka Mullivaikal United nation
By Diasa May 17, 2021 10:31 PM GMT
Report

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதி ( Former UN Special Adviser on the Prevention of Genocide ) Adama Dieng  முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Mullivaikal Memorial lecture ) ஒன்றினை வழங்க இருக்கின்றார்.

ஏழாவது ஆண்டாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதோடு, உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வொன்றினை இந்நாளில் ஏற்பாடு செய்துள்ளது.

2012 முதல் 2020 ஆண்டு வரை இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நா சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றிய Adama Dieng அவர்கள், 1995-2001 ஆண்டுகளில் கெய்ரி நாட்டுக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றியிருந்தவர்.1982-1990 காலங்களில் அனைத்துலக நீதிபதிகள் ஆணையத்திலும் பங்கெடுத்திருந்தவர் மட்டுமல்லாது, 45க்கும் மேற்பட்ட கருத்தாக்கங்களை பதிப்பாக வெளியிட்டவர்.

பல்வேறு ஆளுமைகளை கொண்ட Adama Dieng  பங்கெடுக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, 18-05-2021 செவ்வாய்க்கிழமை New York 10 AM / UK : 3PM / EU : 4 PMநேரத்துக்கு இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம். இதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வு நியுயோர்க் நேரம் காலை 10 மணிக்கு (UK : 7 PM / EU : 8 PM) தொடங்குகின்றது.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையுடன் இடம்பெற இருக்கின்ற நிகழ்வினை www.tgte.tv நேரஞ்சலாக காணலாம். உலகளாவிய ரீதியில் கோவிட்  வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி பொது நிகழ்வுகளை முன்னெடுப்பது பல நாடுகளில் சவாலாக மாறியுள்ள நிலையில், இணையவழியே உலகளாவிய நிகழ்வாக இவ்விரு நிகழ்வுகளையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது.

எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய துக்க நாளாக நினைவேந்துவது எமது தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக இருக்கிறது.

இதனால் கோவிட் வைரஸ் பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு இணைவழியாக நினைவேந்துவோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நாளில் வேலைத்தளங்களுக்கோ, அத்தியாவசிய தேவைகளுக்கோ வெளியில் செல்பவர்கள் கறுப்புப்பட்டியணிந்து சென்று எமது மக்கள் பட்ட துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.  'இன்னுமொரு முள்ளிவாய்காலை நடக்கவிடமாட்டோம்' என்ற உறுதியினை எமது அடுத்த சந்ததிகளின் மனங்களில் நிறைய வைக்க, முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தினை நினைவிற் கொள்ளும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சியினை' குடும்பமாக உண்போம்.

இம்முள்ளிவாயக்கால் கஞ்சி என்பது எமது மக்கள் பட்ட துயரினை நாம் உள்ளுணர்ந்து அன்றை தினம் எமது விடுகளில் நாம் தயாரித்து உணவாக உட்கொள்ளும் கஞ்சியினைக் குறிக்கும். யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின்அவலத்தை நினைவு கொள்வது போல், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் குண்டு மழைக்கும் மத்தியிலும் மக்களின் பசி தீர்த்தது போல் நாமும் முள்ளிவாயக்கால் இனவழிப்பு நினைவு நாளில் கஞ்சி உண்டு எமது மக்களின் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற்கொள்ளவோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US