ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழ்.விஜயம் (Photos)
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்றுமுன்தினம் வருகை தந்திருந்ததுடன் இன்று (06.09.2023) பல்வேறுபட்ட சந்திப்பில் ஈடுபட்டார்.
யாழ்.மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம்
ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை சந்தித்தார்.
யாழ்.கோட்டைக்கு விஐயம்
யாழ்ப்பாணப் கோட்டைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான
வதிவிடப்பிரதிநிதி அங்கிருந்து யாழ் நகரத்தின் அழகை பார்வையிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
