வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டத்தை நீக்குவதற்கும், குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காணி உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 1972 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்(Video)
புதிய பாதுகாப்புச்சட்டம் அறிமுகம்
நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட வீட்டு வாடகை சட்டம் குறித்த ஆலோசனைக் குழு இந்த விடயத்தை ஆய்வு செய்துள்ளது.
அதன்படி, குத்தகைதாரர் மற்றும் நில உரிமையாளரின் உரிமைகளை சமமாகப் பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.